மீண்டும் அதிபராக அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற அனுமதி கேட்கும் புரூண்டி அதிபர்

புரூண்டி அதிபர் பியரி குரூன்ஸிசா, அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற தனக்கு அனுமதி தந்தால் அடுத்த அதிபர் தேர்தலிலும் போட்டியிட தயாராக இருப்பதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Sean Gallup
Image caption புரூண்டி அதிபர் பியரி குரூன்ஸிசா

கடந்தாண்டு இதே போன்று சர்ச்சைக்குரிய வகையில் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடப் போவதாக எடுத்த முடிவு ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாக காரணமாக அமைந்தது. அப்போது, 2020ல் பதவியில் இருந்து இறங்கப் போவதாகத் தெரிவித்தார்.

எனினும், தன்னுடைய மக்கள் தான் மீண்டும் அதிபராக வேண்டும் என நினைத்தால் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று, அறிவித்தார்.

மேலும், அதிபர் பதவி குறித்த கால வரம்புகள் அளவுக்கதிகமாக கவனிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.