சீனாவில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சையில் ஈடுபட்டதாக 16 பேர் கைது

சீனாவில் சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று சிகிச்சையில் ஈடுபட்டதற்காக 16 பேருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள்.

படத்தின் காப்புரிமை JES AZNAR
Image caption கோப்புப்படம்

ஷான்டூங் மாகாணத்தை சேர்ந்த இந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இரு மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மற்றும் செவிலியர் ஒருவரும் அடங்குவர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வேண்டுபவர்களுக்கு சிறுநீரகங்களை விற்க தயாராக இருந்தவர்களுடன் இந்த மருத்துவத்துறையை சேர்ந்தவர்களும் அழைத்து வரப்பட்டனர்.

ஒரு சிறுநீரகத்திற்கு சுமார் 60 ஆயிரம் டாலர்கள் வரை நோயாளிகளிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உடல் உறுப்பு தானத்திற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மாற்று சிறுநீரகத்திற்கான சட்டவிரோத கருப்பு சந்தையை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்