இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி

இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் 16 வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இஸ்தான்புல் கேளிக்கை விடுதியில் பயங்கரவாத தாக்குதலில் 39 பேர் பலி

உள்ளூர் நேரப்படி 01.30 மணிக்கு ரீய்னா இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை இன்னும் போலிசார் தேடி வருவதாக அமைச்சர் சுலேமான் சொய்லு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நிகழ்ந்து பல மணி நேரங்கள் கழித்தும் தாக்குதல்தாரி எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

மேலும், 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தீவிரவாதியை தேடும்பணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் அவரை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சொய்லு கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்