புரூண்டியின் சுற்றுசூழல் அமைச்சர் சுட்டுக்கொலை

புத்தாண்டு தினத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது புரூண்டியின் சுற்றுசூழல் அமைச்சர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

படத்தின் காப்புரிமை GOVERNMENT OF BURUNDI
Image caption புரூண்டியின் சுற்றுசூழல் அமைச்சர் இமானுவேல் நியோன்குரு

உள்ளூர் நேரப்படி, நள்ளிரவு 12.45 மணிக்கு 53 வயதுடைய இமானுவேல் நியோன்குரு, துப்பாக்கி வைத்திருந்த ஒரு குற்றவாளியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலிசாரின் பேச்சாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த படுகொலையை தொடர்ந்து நியோன்குருவுடன் வந்த பெண் ஒருவர் போலிசாரின் விசாரணைக்காக தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பியரி குருக்கி என்பவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குற்றவாளி தண்டிக்கப்படுவார்

என்று புரூண்டி அதிபர் பியரி குருன்ஸிசா தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் அதிபர் பியரி மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் நீடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில், ராணுவத்தின் உயரதிகாரிகளும் அடங்குவார்கள்.