எல்லை வேலியை தகர்க்க முயன்ற ஆப்ரிக்க குடியேறிகள்: பலர் காயம்

மொராக்கோ மற்றும் ஸ்பெயினில் உள்ள ஷியோட்டா பகுதிக்கு இடையில் உள்ள எல்லை வேலியை ஒராயிரத்திற்கும் மேலான ஆப்ரிக்க குடியேறிகள் தகர்த்துக் கொண்டு செல்ல முயற்சித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இரண்டு பேர் சிகிச்சைக்காக ஷியோட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் மற்றவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் மாட்ரிட் அரசு தெரிவித்துள்ளது.

ஸ்பெயினைச் சேர்ந்த ஐந்து போலிஸ் அதிகாரிகளும் மொராக்கோவைச் சேர்ந்த ஐம்பது பாதுகாப்புப் படையினரும் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவருக்கு பார்வை பறிபோனது.

ஐரோப்பாவின் ஒரு பகுதியாக இருக்கும் அந்த பிராந்தியத்தின் ஊடாக ஐரோப்பாவில் நுழைவதற்காக அடிக்கடி தெற்கு ஆப்ரிக்க மக்கள் முயற்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்