இந்தோனீஷியாவில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 23 பேர் பலி: 17 பேரைக் காணவில்லை

இந்தோனீசியாவில் சுற்றுலாப் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 17 பேர் காணாமல் போயுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption விபத்திற்குள்ளான சுற்றுலாப் படகு

தலைநகர் ஜகார்தாவுக்கு வடக்கே சுற்றுலா தீவுக்கு சென்று கொண்டிருந்த அந்த படகில் தீ பிடித்ததை அடுத்து அதிலிருந்து தப்பிக்க பல பயணிகள் கடலில் குதித்தனர்; சுமார் 200 பேர் மீட்கப்பட்டனர்.

ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் படகில் தீப்பற்றியிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்தோனீஷியாவில் படகுகளில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளதால் இம்மாதிரியான விபத்துகள் பரவலாக நடைபெறுகின்றன.