கொலம்பியா: கொரில்லா குழுவிலிருந்து எட்டு குழந்தை சிப்பாய்கள் மீட்பு

தேசிய விடுதலை இராணுவ கொரில்லா குழுவில் சிப்பாய்களாக பணியமர்த்தப்பட்ட எட்டு குழந்தை சிப்பாய்களை மீட்டுள்ளதாக கொலம்பிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தொலைதூர வடக்கு பிராந்தியத்தில் நடத்தப்பட்ட்ட ஒரு ராணுவ நடவடிக்கையின் போது இந்த சிறார்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்;

அந்த ராணுவ நடவடிக்கையின் போது குறைந்தது 12 கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் பிடிப்பட்டனர்.

தேசிய விடுதலை இராணுவ கொரில்லா குழு, ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமாக அரசுக்கு எதிராக போராடி வருகிறது.

கிளர்ச்சியாளர்கள் பணயக்கைதியாக வைத்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை விடுவிக்க மறுத்ததால் அக்டோபரில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை முறிந்து போனது.

அண்டை பகுதியான ஈக்வடாரில் இந்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான புதிய முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்