இந்த ஆண்டு கடிகாரத்தில் கூடுதலாக ஒரு நொடி சேர்க்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா ?

பூமியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள வேகக் குறைப்பை சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டின் புத்தாண்டு  கவுண்ட் டவுன் போது ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த ஆண்டு கடிகாரத்தில் கூடுதலாக ஒரு நொடி சேர்க்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா ?

இந்த கூடுதல் நொடியானது, கடிகாரம் 23.59.60 என்று நள்ளிரவில் பதிவானபோது, புதிய 2017 ஆம் ஆண்டை காலதாமதிக்கும் விதமாக ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த முறையானது  ஜி எம் டி எனப்படும் கிரீன்விச் நேரத்தை பயன்படுத்தும் நாடுகளை பாதிக்கக்கூடும். அதில் பிரிட்டனும் அடங்கும்.

அணு கடிகாரங்களைவிட ஒப்பிடும் போது வழக்கமான நேரமானது தாமதமாவதால் இந்த மாற்றம் தேவைப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதே போன்று ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டது.

தற்போது, 27வது முறையாக இந்த ஆண்டு லீப் நொடி சேர்க்கப்படுகிறது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் தேசிய நேரகால அளவிற்கு பொறுப்பு வகிக்கும் என் பி எல் எனப்படும் தேசிய இயற்பியல் ஆய்வகமானது, ஒரு நிலையான மற்றும் நீடித்த கால அளவை வழங்குவதற்காக அணு கடிகாரங்களை பயன்படுத்தி வருகிறது.

''பூமியின் சுழற்சிக்கு ஏற்ப நேரத்தை சிறப்பாக கையாளுவதில் அணு கடிகாரங்கள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முறை சிறப்பாக இருக்கும்'' என்கிறார் என் பி எல்லில் உள்ள மூத்த ஆராய்ச்சியாளர் பீட்டர் விப்பர்லே

மேலும்,  பூமியின் நேரத்திலிருந்து உள்ளூர் நேரமானது நகர்ந்து செல்லாமல் இருப்பதை தடுப்பதற்கும் லீப் நொடி அவசியம் தேவை என்கிறார் அவர்.

எனினும், இந்த கால நகர்வு மிகச்சிறியதாக இருந்தாலும், இது திருத்தப்படவில்லை என்றால் ஒருநாள் சூரிய உதயத்திற்கு முன் நண்பகல் நேரத்தை கடிகாரங்கள் காட்டும் என்கிறார் பீட்டர்.