எக்வேடோரியல் கினியா : ஆடம்பர மாளிகை, விலை உயர்ந்த கார்கள் - துணை அதிபரின் ராஜ வாழ்க்கை

எக்வேடோரியல் கினியா அதிபரின் மகன் குறித்த வழக்கு விசாரணையானது பிரான்ஸில் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எக்வேடோரியல் கினியா அதிபரின் மகன் தியோடோரின் ஒபியாங்

எக்வேடோரியல் கினியாவின் துணை அதிபராக பதவி வகிக்கும் தியோடோரின் ஒபியாங், நாட்டின் பணத்தைக் கொண்டு பாரிஸில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தன்னுடைய பெண் தோழியுடன் துணை அதிபர்

நீதிமன்றத்தை தான் ஆங்கீகரிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய உடைமைகளில், 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புள்ள மாளிகையும், மற்றும் புகாட்டி, ஃபெராரி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களும் அடங்கும்.