புத்தாண்டு தின வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட அர்ஜென்டினா அரசாங்கம்

புத்தாண்டு தின வாழ்த்து செய்தியை வெளியிட்ட அர்ஜென்டினா அரசாங்கம் அதில் சர்ச்சைக்குரிய ஃபால்க்லேண்ட் தீவுகள் இடம்பெறாத நாட்டின் வரைபடத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை JUAN MABROMATA
Image caption கோப்புப்படம்

சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் ட்விட்டரில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படத்தால் உடனடி கண்டன குரல்கள் எழுந்தன.

ஃபால்க்லேண்ட் தீவுகள் மீது அர்ஜென்டினாவின் இறையாண்மைக்கு துரோகம் இழைப்பதாக அரசாங்கத்தை சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த தவறுக்காக வடிவமைப்புத்துறையை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆர்ஜென்டினாவில் மால்வினாஸ் என்று அறியப்படும் ஃபால்க்லேண்ட்ஸ் தீவுகள் பிரிட்டிஷ் ஆளுகைக்கு கீழ் உள்ளன.