சோமாலியாவில் இரட்டை கார் குண்டு தாக்குதல், 4 பேர் பலி

சோமாலிய தலைநகர் மொகதிஷுவில் நடைபெற்ற இரட்டை கார் குண்டு தாக்குதல்களில், குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

ஆப்ரிக்க ஒன்றியத்தின் அமைதிகாக்கும் படைப்பிரிவுகளின் ராணுவ தளத்திற்கு அருகிலுள்ள ஒரு சோதனை நிலையத்தில் ஒரு தாக்குதலும், அதற்கு அருகிலுள்ள அமைதி ஹோட்டல் எனப்படுகின்ற ஹோட்டலுக்கு வெளியில் இன்னொரு தாக்குதலும் நடைபெற்றுள்ளன.

இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான அல்-ஷபாப் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருக்கிறது.

2011 ஆம் ஆண்டு ஆப்ரிக்க ஒன்றியம் மற்றும் சோமாலிய அரசு படைப்பிரிவுகளால், மொதிஷுவுக்கு வெளியே விரட்டப்பட்டுள்ள நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து இந்த குழு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நாட்டில் நடைபெற வேண்டிய அதிபர் தேர்தல் பாதுகாப்பு காரணங்களால் பலமுறை தாமதமாகி வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்