பிரேசில் சிறையில் கலவரம், 50-க்கு மேலானோர் பலி

பிரேசிலின் வடக்கு பகுதியில் இருக்கும் சிறை ஒன்றில் நடைபெற்ற கலவரத்தில், 50-க்கு மேலானோர் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஞாயிற்றுக்கிழமையன்று அனிசியோ ஜோபிம் சிறையில் தொடங்கிய கலவரம் திங்கள்கிழமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மனாயுஸ் மாநிலத்திலுள்ள இந்த சிறையில் போட்டி குழுக்களுக்கு இடையில் ஆரம்பித்த மோதலுக்கு பிறகு தொடங்கியதாக கருதப்படும் இந்த குழப்பத்தின்போது, எண்ணிக்கை தெரியாத அளவுக்கு கைதிகள் பலர் தப்பிவிட்டனர்.

சிறைச்சாலைகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இரு நிறுவனங்கள், அது தொடர்பாக கடந்த ஆண்டு மோதிக் கொண்டன

தொடர்புடைய தலைப்புகள்