ட்ரம்ப் கட்டிய அமெரிக்க தாஜ்மஹாலின் இன்றைய நிலையென்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ட்ரம்ப் கட்டிய அமெரிக்க தாஜ்மஹாலின் இன்றைய நிலையென்ன?

அமெரிக்க அதிபராகப்போகும் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் வாழ்வது எப்படி இருக்கும்?

அதிபராகத் தேர்வாகியிருப்பவரின் ஆட்சித்திறன் குறித்து அட்லாண்டிக் நகரில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை.

காரணம் அட்லாண்டிக் நகரில் ட்ரம்பின் வர்த்தக முயற்சிகள் எல்லாமே தொடர் தோல்வியில் முடிந்தன.

லாஸ் வேகாஸுக்குப் போட்டியாக சூதாட்ட மற்றும் களியாட்ட விடுதிகளின் சாம்ராஜ்ஜியத்தை அவர் அந்த நகரில் தான் அமைத்தார். ஆனால் ஒட்டுமொத்த நகரும் திவாலாகும் நிலையில் அட்லாண்டிக் நகரின் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

அதற்கு காரணம் டொனால்ட் ட்ரம்ப் என்பது அந்நகரவாசிகளின் குற்றச்சாட்டு. டொனால்ட் ட்ரம்ப் அதை மறுக்கிறார்.

அட்லாண்டிக் நகருக்கு சென்ற பிபிசி செய்தியாளர் அங்குள்ள நிலைமை குறித்து சேகரித்த நேரடிச் செய்தித்தொகுப்பு.