'இது நடக்காது': வடகொரியாவின் ஆணுஆயுத அச்சுறுத்தல் குறித்து டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்த திறன்மிக்க ஏவுகணையொன்றை தான் தயாரித்து வருவதாக வெளியிடப்பட்ட வடகொரியாவின் அண்மைய கூற்றினை, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் புறந்தள்ளியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விடுத்த புத்தாண்டு செய்தியில், சக்திவாய்ந்த இந்த ஏவுகணையை நிறுவுவது கடைசி கட்டத்தை எட்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு தற்புகழ்ச்சி உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தான் வெளியிட்ட ஒரு டிவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

''இது நடக்காது'', என்று டிரம்ப் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் ஆணுஆயுத திறன் மீது தனது சந்தேகங்களை டிரம்ப் வெளிப்படுத்துகிறாரா அல்லது இது குறித்த தடுப்பு நடவடிக்கையை திட்டமிடுகிறாரா என்று தெளிவாகத் தெரியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்