ஹாங்காங்: முன்னாள் தலைமை நிர்வாகியான டொனால்ட் ஸங் மீதான ஊழல் விசாரணை துவக்கம்

ஹாங்காங்கின் முன்னாள் தலைமை நிர்வாகியான டொனால்ட் ஸங் மீதான ஊழல் விசாரணை துவங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டொனால்ட் ஸங் மீதான ஊழல் விசாரணை துவக்கம்

தனது செல்வாக்கை பயன்படுத்தி, ஒரு ஒளிபரப்பு நிறுவனத்தில் உள்ள ஒரு முக்கிய பங்குதாரரிடமிருந்து மிகக் குறைந்த வாடகையில் தெற்கு சீனாவில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டில் இருந்தார் என்று இவ்வழக்கில் டொனால்ட் ஸங் மீது அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமம் பயன்பாட்டுக்கு எவ்வித சுயநலன் சார்ந்த முரண்பாடுகளைத் தெரிவிக்காமல் டொனால்ட் ஸங் ஒப்புதல் அளித்தார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இக்குற்றச்சாட்டுக்களை டொனால்ட் ஸங் மறுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்