இஸ்ரேல்: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரதமரிடம் விசாரணை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் போலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு

நெதன்யாஹு தான் தவறு செய்யவில்லை என மறுத்துள்ளார்; மேலும் தொழிலதிபர்களிடமிருந்து தான் பரிசு பொருட்கள் பெறுவதாக உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்தி அர்த்தமற்றது என தெரிவித்துள்ளார்.

தனது மேல் உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எதிரணியினர் கொண்டாடத்தில் ஈடுபட வேண்டிய தருணம் வரவில்லை என அவர் எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நெதன்யாஹுவின் வீட்டிற்கு முன் போடப்பட்டுள்ள கருப்பு திரை

விசாரணையாளர்கள் கேமராக்களில் படம்படிக்கப்படுவதை தடுக்க நெதன்யாஹுவின் வீட்டிற்கு முன் கருப்பு திரை போடப்பட்டுள்ளது.

நெதன்யாஹு மற்றும் அவரது மனைவி சாரா ஆகிய இருவரும் அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு உட்பட கடந்த காலங்களில் பல ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்தித்துள்ளனர்