அமெரிக்காவில் செவலர்லே கார்களுக்கு வரிவிலக்கா? டொனால்ட் டிரம்ப் கோபம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption வரிச்சலுகை ஏற்புடையதா?

மெக்ஸிகோவில் தயாரிக்கப்படும் கார்கள் அமெரிக்காவில் வரியில்லாமல் விற்கப்படுவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அத்தகைய வாகனங்களுக்கு பெருமளவிலான எல்லை வரி விதிக்கப்பட வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ், அமெரிக்காவில் விற்கப்படும் செவர்லே குரூஸ் செடான் ரக கார்கள், ஓஹையோ மாநிலத்தில் தயாரிக்கப்டடவை என தெரிவி்த்துள்ளது.

உலகச் சந்தையில் விற்கப்படும் கார்கள்தான் மெக்ஸிகோவில் தயாரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்