நைஜீரியாவில் ஏழைகளுக்கு மாதந்தோறும் 16 டாலர்; புதிய திட்டம் அறிமுகம்

நைஜீரியாவில் ஒரு மில்லியன் ஏழை, எளியோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இதன் முதல் கட்டமாக, நைஜீரியாவில் மொத்தமுள்ள 36 மாநிலங்களில் 16 மாநிலங்களில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு நபருக்கும் மாதம் 16 டாலர் வழங்கப்படும்.

அதிபர் முகமது புஹாரி கடந்த 2015-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், வறுமை மர்றும் ஊழலை ஒழிக்கப் போவதாக சபதம் செய்தார்.

எனினும் இத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ஏனெனில், மக்கள் தொகை குறித்த சமீபத்திய ஆவணங்கள் இல்லை. 170 மில்லியன் இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்