பிலிப்பைன்ஸில் சிறை உடைப்பு: 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர்

இன்று (புதன்கிழமை) அதிகாலை வேளையில், பிலிப்பைன்ஸின் கிடாபவான் நகரில் நடந்த ஒரு சிறை உடைப்பு நடவடிக்கையால், நூற்றுக்கும் அதிகமாக கைதிகள் அச்சிறையிலிருந்து தப்பியோடியுள்ளனர்.

Image caption பிலிப்பைன்ஸில் சிறை உடைப்பு: 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர்

வடக்கு கொட்டோபாட்டோ பகுதியில் உள்ள இந்த சிறையை, டஜன் கணக்கான இஸ்லாமிய போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தாக்கியதில் குறைந்தது ஒரு சிறை அதிகாரியும், ஒரு கைதியும் உயிரிழந்ததாக, இது குறித்து வரும் ஆரம்ப கட்ட த் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளை பிலிப்பைன்ஸ் நாட்டின் படையினரும், போலீசாரும் தேடி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸின் மின்டனாவ் தீவில் உள்ள கிடாபவான் நகரில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.