மியான்மாரில் இனப்படுகொலை நடக்கவில்லை: அரசு ஆணையம்

மியான்மாரில் உள்ள சிறுபான்மை இஸ்லாமிய ரொஹிங்கா மக்களுக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் தவறுகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்ட ஆணையமொன்று இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மியான்மாரில் இருந்து வெளியேறி வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்த ரொஹிங்கா மக்கள்

அண்மை மாதங்களில், பல ஆயிரக்கணக்கான ரொஹிங்கா மக்கள் மியான்மாரில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பாலியல் வல்லுறவு, கொலை, சித்ரவதை மற்றும் தீவைப்பு ஆகிய குற்றங்களை மியான்மார் ராணுவம் இழைத்ததாக ரொஹிங்கா மக்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால், இவர்களின் குற்றச்சாட்டுக்களை ஏற்கும் வண்ணம் போதுமான ஆதாரங்கள் இல்லை என அரசு அமைத்த இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

மியான்மாரில் இனப்படுகொலை எதுவும் நடைபெறவில்லை என அரசு அமைத்த இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்