அலமாரிக்கடியில் சிக்கிய தம்பியைக் காத்த இரண்டு வயது அண்ணன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலமாரிக்கடியில் சிக்கிய தம்பியைக் காத்த இரண்டு வயது அண்ணன்

அமெரிக்காவின் உடாவில் இரட்டையர்களான பாவ்டியும் ப்ராக் ஷாஃபும் தங்கள் அறையில் விளையாடிக்கொண்டிருந்தபோது இது நடந்தது.

அலமாரிக்கடியில் சிக்கிய தம்பியை காப்பாற்றத்தவித்த இரண்டுவயது அண்ணன் பாவ்டி ஷாஃப், அலமாரியை சுற்றிவந்து பார்த்து நின்று சில நொடி நிதானமாக யோசித்து இறுதியில் அதைத் தூக்கி தம்பியை காப்பாற்றினார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அவர்கள் அறையில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாயின.

இருவருமே காயங்களின்றி தப்பினாலும் இந்த காட்சிகளைப்பார்த்து பதைத்துப்போனதாக கூறுகிறார் இவர்களின் தாய் கைலி ஷாஃப். இந்த காட்சிகளை வெளியிட பெரிதும் தயங்கினாலும் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படும் என்பதனால் தயக்கத்துடனே இதை வெளியிடுவதாக இந்த இரட்டையரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த அலமாரியை ஆணிகள் மூலம் சுவற்றோடு இணைத்து விழாமல் செய்திருப்பதாகவும் மற்ற பெற்றோரையும் அப்படி செய்யும்படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

படங்கள்: கைலி ஷாஃப்