ஒபாமா சுகாதார காப்பீட்டு திட்டத்தை நீக்கக்கோரும் முயற்சிகளுக்கு ஜனநாயக கட்சி எதிர்ப்பு

ஒபாமா காப்பீடு நலன் என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை வரவிருக்கும் புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் நீக்கக்கோரும் முயற்சிகளை, தாங்கள் கடுமையாக எதிர்க்க போவதாக மூத்த ஜனநாயக கட்சி தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஒபாமா சுகாதார காப்பீட்டு திட்டத்தை நீக்கக்கோரும் முயற்சிகளுக்கு ஜனநாயக கட்சி எதிர்ப்பு

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே சுகாதார காப்பீட்டு திட்டத்தை நீக்கும் முயற்சிகள் தொடங்கும் என்று குடியரசு கட்சியின் சார்பாக அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், வரும் மாதங்களில் இது தொடர்பான மேலும் தகவல்கள் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மைக் பென்ஸ் வலியுறுத்தியிருந்தார்.

ஒபாமா சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கு மாற்றாக ஒரு சுகாதார காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, சுகாதார நலன் துறையில் குடியரசு கட்சியினருடன் தங்கள் சேர்ந்து பணியாற்றுவதை கருத இயலும் என்று அமெரிக்க செனட் அவையின் ஜனநாயக கட்சித் தலைவரான ஷக் சூமர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்