டொனால்ட் டிரம்பால் பதவி இழந்த மெக்சிகோ அமைச்சருக்கு மீண்டும் அமைச்சர் பதவி

கடந்த ஆண்டு மெக்சிகோவுக்கு டொனால்ட் டிரம்ப் வருகை புரிந்த போது, அவரின் பயண ஏற்பாடுகளை செய்தது தொடர்பாக பதவி இழந்த அந்நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரான லூயிஸ் வீடகாரேவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மீண்டும் அமைச்சராகியுள்ள லூயிஸ் வீடகாரே

மெக்சிகோவின் புதிய வெளியுறவு அமைச்சராக ஆகியுள்ள லூயிஸ் வீடகாரே, அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கட்டப்பட உத்தேசித்துள்ள சுவர் உள்பட அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய அரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளை அமெரிக்காவின் புதிதாக பதவியேற்கவுள்ள டிரம்ப் நிர்வாகத்துடன் மெக்சிகோ நடத்தும் பேச்சுவார்த்தைகளில் தலைமையேற்பார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லூயிஸ் வீடகாரே பதவி விலக நேர்ந்ததற்கு, டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ குடியேறிகளை குற்றவாளிகள் என்றும், பாலியல் வல்லுறவு செய்பவர்கள் என்றும் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்தார். அவர் மெக்சிகோவுக்கு வருகை புரிந்த போது, ஏற்பாடுகளை செய்தது தொடர்பாக

லூயிஸ் வீடகாரே கடும் விமர்சனங்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்