அடுத்த ஐந்தாண்டுகளில் 13 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க சீனா திட்டம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், பல பில்லியன் டாலர் முதலீடு செய்வதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 13 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Pascal Parrot
Image caption அடுத்த ஐந்தாண்டுகளில் 13 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க சீனா திட்டம்

தூய்மையான எரிபொருளுக்கு மாறுவதை அரசியல் முன்னுரிமையாக சீனா மாற்றியுள்ளது.

நிலக்கரியில் இயங்கும் மின் நிலையங்களால் ஏற்பட்ட கடுமையான மாசு பிரச்சனை காரணமாக இந்த அவசர நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது..

வட சீனாவை பல வாரங்கள் கடுமையான நச்சுப்புகை சூழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், பெய்ஜிங்கில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறும் போது, 360 பில்லியன் டாலர் முதலீடு மிகப்பெரியதாக கருதப்பட்டாலும், இதைவிட லட்சிய இலக்குகள் இதற்கு முன்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய தலைப்புகள்