இராக் : மொசூல் நகருக்கான போரில் முக்கிய நகரை கைப்பற்றிய ராணுவம்

இராக்கில் மொசூல் நகரை கைப்பற்றும் போரில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஒரு முக்கிய சுற்றுப்புற பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை MARWAN NAAMANI
Image caption கோப்புப்படம்

அல்-முத்தானா மாவட்டத்திற்குள் முன்னேறி தேசிய கொடியை ஏற்றியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மொசூலின் கிழக்குப் பகுதியின் இதயமாகக் கருதப்படும் பகுதியில் இந்த சுற்றுப்புறம் அமைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மொசூல் நகருக்கான போர் தொடங்கியதிலிருந்து கடும் எதிர்ப்புகளை ராணுவம் எதிர்கொண்டுள்ளது.

ஆனால், படையினர் தற்போது வலுப்படுத்தப்பட்டு சமீப நாட்களில் அதிகளவில் முன்னேறி வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்