சீன தலைநகரில் உள்ள பள்ளிகளில் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்கள் அமைக்க முடிவு

வட சீனாவில் தொடர்ந்து ஒரு தடிமனான போர்வை போன்று பனிப்புகை நீடித்து வருவதால், தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் காற்று சுத்தகரிப்பு இயந்திரங்களை பொருத்தும் பணி தொடங்க உள்ளதாக பெய்ஜிங் நகர அரசாங்கம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பள்ளிகளில் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்கள் அமைக்க அந்நகர அரசு முடிவெடுத்துள்ளது.

மாணவர்களின் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்துமாறு பள்ளிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இம்முறை மோசமான நச்சுப்புகையானது பெய்ஜிங்கை தாக்கியதை தொடர்ந்து அனைவரது கோபத்தையும் அதிகரித்துள்ளது. இச்சூழலில், அரசின் இந்த நடவடிக்கை வெளிவந்துள்ளது.

சீன தலைநகரில் ஏற்பட்டுள்ள சாதகமற்ற வானிலை மாசு வெளியேறுவதை தடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்