ஐவரி கோஸ்டில் அரசுக்கு எதிராக இரு பெரிய நகரங்களில் ராணுவ படையினர் கலகம்

ஐவரி கோஸ்டில் உள்ள இரு பெரும் நகரங்களான புவாக்கே மற்றும் டாலோவில் ராணுவ படையினர் அரசுக்கு கீழ்படிய மறுத்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் அலாசான் உட்டாரா பாதுகாப்புப் படைத் தளபதிகளுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

குஹாஹோகோ என்ற மூன்றாவது நகரத்தின் வீதிகளிலும் படையினர் உள்ளனர். ஆனால், அவர்கள் போராடுகிறார்களா அல்லது போராட்டத்தை தடுக்க வந்திருக்கிறார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

படையினருக்கு பணத்தேவை இருப்பதாக புவாக்கேவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், காரணம் அவர்களிடத்தில் தலைவர்கள் என யாருமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரை தொடர்ந்து, நுவெல்ஸ் என்ற போராளி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும், தற்போது அரசுக்கு கீழ்படிய மறுக்கும் பெரும்பாலான படையினர் அந்தக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.