ஐ.எஸ் வசமிருந்து 850 ஆண்டு பழமைவாய்ந்த கோட்டையை கைப்பற்றிய குர்தீஷ் தீவிரவாதிகள்

வட சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் குழுவை எதிர்த்து சண்டையிட்டு வரும் முக்கிய குர்தீஷ் தீவிரவாத குழு ஒன்று, ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டையை கைப்பற்றிவிட்டதாக தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்து சிரியாவின் ஜனநாயக படைகள் பல வாரங்களாக பல பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர்.

தற்போது, கலாத் ஜபார் என்ற அறியப்படும் பகுதியிலிருந்து தீவிரவாதிகளை விரட்டி உள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய கோட்டையாக திகழும் ராக்கா நகரின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு நதியின் கரையில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது,