ஆஃப்கானிஸ்தான் : கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 நிலக்கரி சுரங்க பணியாளர்கள் கொலை

பயங்கரவாத தாக்குதல் ஒன்றில் 13 நிலக்கரி சுரங்க பணியாளர்களை கிளர்ச்சியாளர்கள் கொன்றுள்ளதாக காபூலின் வடக்கே உள்ள பால்கன் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மூன்றுபேர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

கொல்லப்பட்டவர்கள் ஹஸாரா என்ற சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்று மாகாண ஆளுநரின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஹஸாரா சிறுபான்மையின மக்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள்.

சுன்னி பயங்கரவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் ஹஸாரா சிறுபான்மையினர் இலக்காகின்றனர்.

இந்த சமீபத்திய கொலைகளுக்கு அதிகாரிகள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகளை குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆனால், இதுவரை இந்த கொலை சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.