சிரியாவிலிருந்து நாடு திரும்பும் ரஷ்யாவின் விமானந்தாங்கிக் கப்பல்

சிரியாவில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் விமானந்தாங்கி போர்க்கப்பலான அட்மிரல் குஸ்நெட்சோவ் மத்திய தரைக்கடலில் இருந்து நாடு திரும்ப உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அட்மிரல் குஸ்நெட்சோவ்

மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் ராணுவ படைகளைக் குறைக்கும் ஒரு பெரிய திட்டத்தின் அங்கமாக இந்த கப்பல் தற்போது நாடு திரும்ப உள்ளது.

ரஷ்யாவின் கூட்டணியை ஆதரிக்கும் அதிபர் பஷார் அல்-அஸாத் சமீபத்தில் அலெப்போ நகருக்கான போரில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றார்.

மேலும், அரசாங்கம் மற்றும் போராளிகள் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தமானது மிகப்பெரியளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும், வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு சிரியாவிலிருந்து தன்னுடைய படைகளின் ஒரு பகுதியை திரும்ப பெறுவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

ஆனால், பின்னர் மோதல் அதிகரித்ததை தொடர்ந்து கூடுதல் படைகளை நிறுத்தியது..

தொடர்புடைய தலைப்புகள்