காவல்துறையினரின் பிடியில் ஃப்ளோரிடா விமான நிலைய தாக்குதல் நடத்திய சந்தேக நபர்

5 பேர் கொல்லப்பட்ட, 8 பேர் காயமடைந்த ஃபோர்ட் லௌடர்டேட் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவரை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநில காவல்துறை காவலில் வைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Google

உடைமைகளை எடுக்கின்ற இடத்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை.

அமெரிக்க ராணுவ அடையாளத்தை வைத்திருந்தவரும், ஈராக்கில் பணியாற்றியவருமான எஸ்டாபன் சன்டியாகோ சந்தேக நபராக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்,

படத்தின் காப்புரிமை EPA

சன்டியாகோ வசித்து வருகின்ற அலாஸ்காவிலுள்ள அமெரிக்க மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள், இவருடைய தீவிர நடத்தையை கண்டு கடந்த நவம்பர் மாதம் மனநல சிகிச்சைக்கு பரிந்துரைத்திருந்தனர்,

தாக்குதலுக்கு முன்னரோ, பின்னரோ இந்த தாக்குதலாளி எதுவும் கூறவில்லை என்று தெரிவித்திருக்கும் காவல்துறையினர், குண்டுகள் தீர்ந்தவுடன் அவர் தரையில் அமைதியாக படுத்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்