காம்பியாவின் அரசியல் நெருக்கடிக்கு முக்கிய தீர்மானம் - மேற்கு ஆப்ரிக்க தலைவர்கள்

இதுவரை நாட்டை ஆண்டு வருகின்ற யாக்யா ஜாமே பதவியில் இருந்து இறங்க மறுக்கின்ற காம்பியா அரசியல் நெருக்கடி தொடர்பாக "முக்கிய தீர்மானம்" ஒன்றை விரைவில் எடுக்கப்போவதாக மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் தெரிவித்திருக்கிறனர்.

படத்தின் காப்புரிமை Reuters/AFP
Image caption அடாமா பாரோ (இடது) யாக்யா ஜமேயை (வலது) மிக குறைந்த இடைவெளியில் தோற்கடித்தார்

கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற அடாயா பரோவை பாதுகாக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதாக, மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகம் என்கிற பிராந்திய குழும நாடுகள் உறுதி அளித்திருக்கின்றன.

தன்னுடைய பதவிக் காலம் நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே இருக்கின்ற நிலையில், யாக்யா ஜாமே பதவியில் இருந்து இறங்காவிட்டால், அண்டை நாடான செனகலில் இருந்து படைப்பிரிவுகள் அனுப்பப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கடந்த வாரம் அதிபர் யாக்யா ஜாமேயை சந்தித்த மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள்

காம்பியாவிலுள்ள தன்னுடைய எதிரணியினர் மீது மனித உரிமை மீறல்களை நடத்தி வருவதாக யாக்யா ஜாமே குற்றம் சுமத்தப்படுகிறார்.

தொடக்கத்தில் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட யாக்யா ஜாமே, பின்னர் மனதை மாற்றிக்கொண்டு, மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் அவருக்கு எதிராக திரண்டிருப்பதாக இப்போது குற்றஞ்சாட்டுகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்