இணையவெளி தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்கும் அமெரிக்கா

இணையவெளி தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்காவின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தரவு தளங்களின் பாதுகாப்பை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க உள்துறை பாதுகாப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இணையத் தாக்குதலால் தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை - டிரம்ப்

இணைய வலையமைப்புகளில் ரஷ்யா திருட்டுத்தனமாக புகுந்து தகவல்களை திருடியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில், தேர்தல் கட்டமைப்புக்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக அமையும் வகையில் தலையிட, ரஷ்ய அதிபர் புதின் தனிப்பட்ட முறையில் ஆணையிட்டதாக நேரடியாக, முதல்முறையாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினோடு நெருக்கிய நட்புறவு கொள்ளப்போவதாக டிரம்ப் குறிப்புணர்த்தியுள்ளார்

டொனால்ட் டிரம்ப், அவருடைய நிர்வாகத்தின் தொடக்கத்திலேயே இணையவெளி தாக்குதல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகைளை எடுப்பார் என்று துணை அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக, உளவுத்துறை அதிகாரிகளுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இணையத் தாக்குதலால் தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை என்று முன்பு தெரிவித்த கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.