தாவர மற்றும் விலங்கினங்களின் மரபணு கட்டமைப்பை பாதிக்கும் நகரமயமாக்கல்

இயற்கை அமைப்புக்கு மிகவும் முக்கியமான நூற்றுக்கணக்கான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணு கட்டமைப்பு நகரமயமாக்கத்தால் மாறிவருவதாக, நகரங்கள் மற்றும் பெருநகரங்களின் அதிகரிப்பு பற்றி பரந்த அளவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பல தாவர மற்றும் விலங்கினங்களை சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொள்ள அல்லது அழிந்து போக செய்ய நகரமயமாக்கம் வழிகோலுவதாக, ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

இத்தகைய சீர்குலைவு, விதைகள் பரவலாகுவதை தடுத்தல், தொற்று நோய்கள் உருவாக புதிய வழிமுறைகள், அதிக மாசுபாடுகள் ஆகியவற்றை உருவாக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்

இப்போதுள்ள உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானோர் நகர்புறங்களில் வாழ்கின்ற நிலையில், அப்பகுதிகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக அளவில் வேறுபட்ட 1600 தாவர மற்றும் விலங்கினங்களின் பரிணாம மாற்றம் தொடர்பான ஆய்வு தரவுகளை பார்த்து வல்லுநர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.