மொசூலில் இருந்து ஐஎஸ் படையினரை வெளியேற்ற இராக்கிய படைகள் முயற்சி

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்தவர்களை மொசூல் நகரத்தில் இருந்து வெளியேற்ற இராக்கிய படைகள் முயன்று வருவதாகவும், ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த நகரத்தை பிரிக்கும் டிகிரிஸ் நதியின் அருகில் ஒரு சில மீட்டர் தொலைவில் தான் உள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பல வாரங்கள் நீடித்த தொய்வை அடுத்து சமீபத்திய நாட்களில், மொசூல் நகரத்தின் கிழக்கு பகுதியில் அரசு படையினர் மீண்டும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல் முத்தான மாவட்டத்தைக் கைப்பற்றிய பிறகு, சனிக்கிழமை அன்று காலை, அரசு படையினர் அல்-கோஃபிரான் என்ற மற்றொரு பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்ரிஸ் நதியின் மேற்கு கரையில் உள்ள நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ஐ எஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.