இந்தோனேசியாவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை

இந்தோனேசியாவில் 2016ம் ஆண்டின் இறுதியில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தடை செய்யப்பட்ட பெரும்பாலான தளங்கள் ஆபாச தரவுகளை கொண்டிருந்ததாகவும், மற்றவை தீவிர அரசியல் கருத்துக்களை பரப்புவதாகவும் அல்லது சட்டவிரோத சூதாட்ட தளங்களாக இருந்ததால் அவை நிறுத்தப்பட்டன என்று தெரியவந்துள்ளது.

2014ல் இந்தோனேசியா அரசு கடுமையான இணைய சட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

இந்தோனேசிய அரசு எதிர்மறையான கருத்து என்று கருதும் தரவுகள் இணையத்தில் இருந்து நீக்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அரசு ஒரு பால் உறவுக்காரர்களுக்கான டேட்டிங் தளங்களை தடை செய்துள்ளதால் அது சிலரை கோபமூட்டியுள்ளது.