தெற்கு தாய்லாந்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு; 12 பேர் பலி

தெற்கு தாய்லாந்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

மழைக்காலம் இல்லாத நேரத்தில் பெய்துவரும் மழை குறைந்தது இன்னும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என்றும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் தாய்லாந்தின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

பல விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகள் தாமதமாகி உள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.

நீரில் மூழ்கியுள்ள சாலைகளை கடக்க பொதுமக்கள் சிலர் காற்று நிரப்பட்ட படுக்கைகள் மற்றும் ரப்பர் வளையங்களை பயன்படுத்தி உள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்