கோபம் தணியாத தென் கொரிய மக்கள்; அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்

தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹை பதவி விலகக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டங்களின் வரிசையில் தொடர்ந்து பதினோராவது வாரமாக, தலைநகர் சோலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழுமி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரிய படகு ஒன்று மூழ்கி 300 பேர் பலியானர்கள். அதில், பெரும்பாலானவர்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள். அந்த சம்பவத்தின் 1000வது நாளை குறிக்கும் விதமாக போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியிருந்தனர்.

தன் நெருங்கிய தோழியை அரசியல் விவகாரங்களில் தலையிட அனுமதித்தார் என்ற எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தென் கொரியா நாடாளுமன்றமானது பார்க் குன் ஹை மீது குற்ற விசாரணை ஒன்றிற்கு அனுமதி அளித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வாரம், அதிபர் மீதான குற்ற விசாரணையை நிறுத்திவைத்துவிட்டு படகு மூழ்கியவுடன் அதிபர் பார்க் எங்கு இருந்தார் என்பது குறித்த ஆய்வுக்கு உத்தரவிடலாமா என்பது குறித்து நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.