துருக்கியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம்

கடந்தாண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய களையெடுப்பில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது

காவல்துறையை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டத்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என இந்த களையெடுப்பு பட்டியலில் அடங்குவார்கள்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை துருக்கி அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமியவாத மதகுருவான ஃபெத்துல்லா குலன் மீது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்காக துருக்கி அரசு குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்