ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு காரணம் தெரியாமல் திணறும் விசாரணை அதிகாரிகள்

அமெரிக்க மாகாணமான ஃபுளோரிடாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இராக் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் நடத்திய மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய அம்மாகாண விசாரணை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஃபோர்ட் லௌடர்டேல் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது, இந்த விமான நிலையமானது தற்போது போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ அடையாளத்தை வைத்திருந்த எஸ்டாபன் சான்டியாகோ என்ற சந்தேக நபரை போலிசார் இன்னும் விசாரித்து வருகின்றனர்.

சான்டியாகோ அலாஸ்காவில் உள்ள அலுவலகத்திற்கு ஏற்கனவே வருகை தந்துள்ளதாகவும், அவருடைய ஒழுங்கற்ற நடத்தை காரணமாக மனநல மதிப்பீட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் எஃப் பி ஐ பேச்சாளரான ஜார்ஜ் பிரோ கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சான்டியாகோ அலாஸ்காவில் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்