தீவிரவாதிகளை ஒடுக்க ஆஃப்கனுக்கு 300 கடற்படையினரை அனுப்ப அமெரிக்க திட்டம்

ஆஃப்கானிஸ்தானில் வரும் மாதங்களில் சுமார் 300 கடற்படையினரை அனுப்பும் அமெரிக்காவின் முடிவை தெற்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாண அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Chung Sung-Jun
Image caption தீவிரவாதிகளை ஒடுக்க ஆஃப்கனுக்கு 300 கடற்படையினரை அனுப்ப அமெரிக்க திட்டம்

நேட்டோ தலைமையிலான படைகள் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஹெல்மண்ட் மாகாணத்திலிருந்து வெளியேறிய போது அமெரிக்க கடற்படையினரும் வெளியேறினார்கள்.

ஆனால், தற்போது ஹெல்மண்டில் தாலிபன் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஆஃப்கன் படையினர் திணறி வருகின்றனர்.

நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஹெல்மண்ட் மாகாணமும் ஒன்று.

போதுமான ஆஃப்கன் படைகள் இல்லாததாலும், நேர்மை குறைந்து வருவதாலும் சர்வதேச படைகளின் ஆதரவு தற்போது மிகவும் அவசியமாக தேவைப்படுவதாக ஹெல்மண்ட் மாகாணத்தின் பாதுகாப்பு சபையின் தலைவர் பஷீர் அகமது ஷகீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஃப்கன் படைகளுக்கு அதிகாரப்பூர்வமாக ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்க அமெரிக்க வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

ஒருவேளை அவர்கள் இலக்கு வைக்கப்பட்டால் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்