ரகசிய வீடியோவில் பிரிட்டன் அமைச்சர்கள் பற்றி தவறான கருத்து: இஸ்ரேல் தூதர் மன்னிப்பு கோரினார்

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption பிரிட்டன் வெளியுறவு அலுவலக அமைச்சர் அலன் டன்கன்

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவர் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டதும், அதில் வெளியுறவு அலுவலக அமைச்சர் அலன் டன்கன் உட்பட பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை "நீக்க வேண்டும்" என்று விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளதற்கு லண்டனுக்கான இஸ்ரேல் தூதர் மன்னிப்பு கோரியுள்ளார்.

அல் ஜசீரா தொலைக்காட்சிக்காக பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் மூத்த அதிகாரி ஷாய் மசாட், சர் அலான் "பல பிரச்சனைகளை உருவாக்குகிறார்" என தெரிவிக்கிறார்.

மேலும் பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன் ஒரு "முட்டாள்" என்றும் கூறுகிறார்.

அலன் டன்கன், இஸ்ரேலின் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர். மேலும் சுதந்திர பாலத்தீனிய நாட்டிற்கு ஆதரவளிப்பவர்.

இஸ்ரேல் அதிகாரியின் இந்த கருத்துக்கள் தூதரகத்தின் எண்ணங்களையோ அல்லது இஸ்ரேல் அரசின் கருத்துக்களையோ பிரதிபலிப்பவை அல்ல என தூதர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்