ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி

ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவுகின்ற கடுமையான குளிரால் கடந்த இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

உயிரிழந்தவர்களில் பலர் அகதிகள் மற்றும் வசிப்பிடம் இல்லாதவர்கள்.

வெள்ளிக்கிழமையன்று, ரஷியாவின் சில பகுதிகளில் 120 ஆண்டுகளில் இல்லாத மிக குளிரான பழம் பெரும் கிறித்துமஸ் நாளை மக்கள் கொண்டாடினர்.

மாஸ்கோவில் இரவு நேரங்களில் வெப்பநிலை மைனஸ் முப்பது டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது.

போலாந்தின் வெப்பநிலை மைனஸ் பதிநான்காக குறைந்ததையடுத்து அங்கு 10 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலியில் தென் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் சூழப்பட்டுள்ள கடுமையான பனிப்போர்வையால் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மிக குளிரான குளிர்கால இரவை சந்தித்துள்ள செக் தலைநகர் ப்ராக்கில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.