பாக்தாத் : காய்கறி சந்தையில் கார் குண்டு வெடித்ததில் 11 பேர் பலி

இராக்கின் கிழக்கு பாக்தாத்தில் சந்தை ஒன்றில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பாதுகாப்பு காவலர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அந்த ஓட்டுநர் தன்னைத்தானே வெடிக்க வைத்ததாகவும் உள்துறை அமைச்சரின் பேச்சாளர் சாட் மான் சுட்டிக்காட்டி உள்ளார்.

அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அரசு என்று அழைத்து கொள்ளும் அமைப்பினர் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

பாக்தாத்தில் உள்ள மாவட்டங்களில் ஷியா முஸ்லிம் பிரிவுனரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில் இது சமீபத்திய தாக்குதலாகும்.

இதே போன்று ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

ஷியா முஸ்லிம் பெரும்பான்மையாக வசிக்கும் சடர் நகர மாவட்டத்தில் உள்ள முக்கிய காய்கறி சந்தையில் இந்த சமீபத்திய தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்