ஃபுளோரிடா தாக்குதல் தொடர்பாக முன்னாள் படை வீரர் மீது வழக்குப்பதிவு

வெள்ளியன்று ஃபோர்ட் லோடர்டேல் விமான நிலையத்தில் ஐந்து பேரை கொன்றதாக போர் வீரர் ஒருவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Image caption எஸ்டீபன் சாண்டியாகோ

எஸ்டீபன் சாண்டியாகோ துப்பாக்கிச்சூட்டில் கொலை மற்றும் காயம் ஏற்படுத்தியதாக நிருபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து பல கேள்விகளை சந்தித்து வருகின்றனர்

நவம்பரில் அலாஸ்காவில் உள்ள எஃப்பிஐ அலுவலகத்திற்கு வந்த சாண்டியாகோவிற்கு மனநல மதிப்பீடு பரிந்துரைக்கப்பட்டதாக எஃப்பிஐ ஒப்புக் கொண்டுள்ளது.

அந்த மதிப்பீட்டிற்கு பிறகு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாண்டியாகோவின் சகோதரர் பிரயான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நவம்பர் மாதத்தில் சாண்டியாகோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி அவர் குற்றம் எதுவும் செய்யாததால் திரும்ப அவரிடமே ஒப்படைக்கப்பட்டதாக அலாஸ்கா போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த துப்பாக்கி தான் விமான நிலைய தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதா என்று தெளிவாக தெரியவில்லை