இஸ்ரேலில் பாதுகாப்புப் படை கூட்டத்தில் லாரியை ஓட்டி 4 பேர் கொலை;

இஸ்ரேலில் தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட ஒருவர், பாதுகாப்பு படை குழுவினர் மீது லாரியை ஏற்றி இடித்ததை தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

மேலும், இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர், இருபது வயதுகளில் உள்ள பெண்கள், ஒருவர் ஆண்.

''மோசமான தாக்குதல் என்றும், இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்றும்,'' இஸ்ரேல் வானொலியில் போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் நடைபெற்ற போது உடல்கள் தெருவில் தூக்கியெறியப்பட்டதாக இஸ்ரேல் வானொலி தெரிவித்துள்ளது.

ஜெருசலம் நகருக்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த தாக்குதல் தொடர்புடைய புகைப்படங்களில், ஒரு லாரியின் முகப்பு கண்ணாடியில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

லாரியில் தாக்குதல் நடத்திய நபர், இஸ்லாமிய நாடு தீவிரவதா அமைப்பின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். அந்தத் தகவல் எப்படிக் கிடைத்தது என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சம்பவ இடத்திலிருந்து புறப்படத் தயாராக பேருந்தில் அமர்ந்துள்ள இஸ்ரேலிய படையினர்

தாக்குதல்தாரி, கிழக்கு ஜெருசலத்திலிருந்து வந்த பாலஸ்தீனியர் என்று இஸ்ரேல் காவல் துறைத் தலைவர் ரோனி அல்செய்ச் தெரிவித்துள்ளார்.

லாரியை ஓட்டி வந்த நபர், மிக வேகமாக படையினரின் கூட்டத்துக்குள் செலுத்துவதையும், அதில் அடிபட்டு விழுந்த வீரர்கள் மீது லாரியை மீண்டும் பின்னால் இயக்கியதையும் சிசிடிவி காமரா காட்சிகளில் இருந்து பார்க்க முடிந்தது. மேலும் அதிகமானவர்களைக் கொல்வதற்காகவே அவர் லாரியை பின்னால் இயக்கியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தை, பாதுகாப்பு அமைச்சருடன் வந்து பிரதமர் நெதன்யாஹு பார்வையிட்டார்.

தொடர்புடைய தலைப்புகள்