நேட்டோவுக்கு டிரம்ப் முழு ஆதரவை வழங்குவார் : பிரிட்டன் பிரதமர் நம்பிக்கை

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் நேட்டோவுக்கு முழு ஆதரவைத்தர மாட்டார் என்ற கருத்துக்களை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே நிராகரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நேட்டோவுக்கு டிரம்ப் முழு ஆதரவை வழங்குவார்

டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின் போது இதுபோன்ற எந்தவொரு சமிக்ஞையும் அவரிடமிருந்து வரவில்லை என்று கூறிய தெரீசா மே, அது மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா உடன் சிறப்பான உறவை கட்டியமைக்க பிரிட்டன் எதிர்ப்பார்ப்பதாக வர்ணித்த தெரீசா மே, இது உலகளாவிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து பேசிய தெரீசா மே, ஒன்றியத்துடன் சிறந்த வர்த்தக தொடர்புகளையும், குடியேற்றத்தை பிரிட்டன் கட்டுப்படுத்த அனுமதித்தல் உள்பட பரஸ்பர நன்மை மற்றும் மேன்மைதரும் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சாத்தியம் என்று வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்