வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க "கழிப்பிட புரட்சி"க்கு திட்டமிடும் சீனா

பெருநகரங்களில் சுத்தமான பொது கழிப்பிட வசதி வழங்குவதை உத்தரவாதம் செய்ய, பல அதிகாரிகளை நியமிக்கும் திட்டத்தை சீனாவின் வட மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சியான் நகரம் அறிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை WANG ZHAO/AFP/Getty Images

மோசமான பொது சுகாதார புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில், பொது கழிப்பிடங்கள் அனைத்தும் சுத்தமாக பேணப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் கடமைகளோடு கழிப்பிட அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

கடந்த ஆண்டு சியான் நகரத்தில் பயணம் மேற்கொண்ட 130 மில்லியனுக்கு மேலான சுற்றுலா பயணிகள், அந்த நகரத்தின் வசதிகள் தொடர்பாக அழுத்தங்களை வழங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images

மேலதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்கின்ற வகையில், ஒரு லட்சம் நவீன கழிப்பிடங்களை சுற்றுலா தளங்களில் கட்டி "கழிப்பிட புரட்சி" ஏற்படுத்தப் போவதாக சீனா அறிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்