மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : ஐ.நா கவலை

மியான்மாரிலிருந்து வெளியேறி வங்கதேசத்திற்குள் நுழையும் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வாரம் மட்டும் சுமார் 22 ஆயிரம் பேர் கிழக்கு வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு நெருக்கடி நிலை தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 65 ஆயிரம் பேர் எல்லை தாண்டியுள்ளனர்.

வட ரக்கீன் மாவட்டம் இன்னும் மூடப்பட்ட ராணுவ பகுதியாக உள்ளது.

ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை குறிவைப்பதாக மியான்மார் ராணுவம் கூறுகிறது.

ஆனால், ரொஹிஞ்சா இன பொதுமக்களை கொலை செய்வதாகவும், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதாகவும் ராணுவம் மீது பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக 12 நாள் சுற்றுப்பயணமாக ஐ.நாவின் சிறப்பு தூதர் யங்கி லீ மியான்மார் வந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்