அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தை திருத்த துருக்கி விவாதம்

அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான முன்மொழிவை துருக்கி நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Burak Kara/Getty Images
Image caption ஜனநாயக அமைப்பை சர்வாதிகார ஆட்சியாக மாற்ற அரசு முயல்கிறது - துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர்

இது போன்றதொரு செயலதிகார அமைப்பு உருவானால், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளின் நிலையை துருக்கியும் அடையும் என்று தற்போதைய அதிபர் ரெஜிப் தாயீப் எர்துவான் கூறியிருக்கிறார்.

ஆனால், ஜனநாயக அமைப்பை சர்வாதிகார ஆட்சியாக மாற்ற அரசு முயல்வதாக முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர் கமால் கிளிசிடரோக்குலு தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் மாதம் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னால், இந்த முன்மொழிவை நிறைவேற்ற ஆளும் ஏகே கட்சிக்கு வலது சாரி எதிர்க்கட்சி ஒன்றின் ஆதரவு தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலையின் ஆணைப்படி எர்துவான் தற்போது ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்